×

கொடைக்கானல் தாலுகா அலுவலகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

கொடைக்கானல், டிச. 2: கொடைக்கானல் தாலுகா அலுவலகத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கொடைக்கானலில் தாலுகா அலுவலகம் அருகே காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், பத்திரப்பதிவுத்துறை அலுவலகம், இ-சேவை மையம், சமூக நலத்துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு வருபவர்கள், தாலுகா அலுவலகம் முன்பு தங்களது வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களும், அலுவலர்களும் அவதிப்படுகின்றனர். எனவே, தாலுகா அலுவலகம் முன்பு நிறுத்தப்படும் வாகங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது இப்பகுதியில் வாகனங்கள் வருவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : taluka office ,Kodaikanal ,
× RELATED இடைப்பாடி தாலுகா அலுவலகம் முற்றுகை பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம்