×

வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

பழநி, டிச. 2: பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் மாணவர்களுக்கான இணையவழி வாக்காளர் விழிப்புணாவ் கருத்தரங்கம் நடந்தது. பழநி தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் அசோகன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் (பொ) பிரபாகர் வரவேற்றார். தாசில்தார் வடிவேல் முருகன் வாக்காளர் சேர்ப்பு, வலிமையான மக்களாட்சி குறித்து பேசினார். நகராட்சி ஆணையர் லட்சுமணன் வாக்குப்பதிவு மற்றும் குடிமக்களின் கடமை குறித்து பேசினார். துணை தாசில்தார் நாச்சிமுத்து வாக்காளர் பெயர் மற்றும் முகவரி திருத்தம் குறித்து பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இணையவழியில் நடந்த கருத்தரங்கில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Voter Awareness Seminar ,