×

நிலவேம்பு குடிநீர் விநியோகம்

பழநி, டிச. 2: பழநி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடும் பனி நிலவி வருகிறது. இதனால் பலருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பழநி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சிறப்பு காவல்படை போலீசார், காந்தி மார்க்கெட் வியாபாரிகள், உழவர் சந்தை என பல இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில், பழநி அருகே ஆயக்குடி கொய்யா சந்தையில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. அரசு சித்த மருத்துவமனையின் டாக்டர் மகேந்திரன் நிலவேம்பு குடிநீரை வழங்கினார். மேலும், காய்ச்சல் அறிகுறி, தடுக்கும் முறை, சிகிச்சை முறை, சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 400க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...