×

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் தபால் நிலையம் முற்றுகை

திருப்பூர், டிச.2:  டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் 44 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், டெல்லி போராட்டத்தில் விவசாயிகளை தாக்கிய போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூர், ரயில் நிலையம் அருகில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்றனர்.அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில், போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் முத்து கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் காமராஜ், செயலாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 44 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவிநாசி: அவிநாசியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஏர் கலப்பையுடன் அவிநாசி தலைமை தபால் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ. மாவட்ட குழு உறுப்பினர் முத்துச்சாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் வெங்கடாசலம், விவசாய சங்க ஒன்றிய தலைவர் முத்துரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : peasants ,Delhi ,post office ,Parties ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...