×

கலெக்டர் அலுவலகத்தில் போதிய இருக்கை இல்லாததால் மக்கள் தரையில் அமரும் அவலம்

திருப்பூர், டிச.2: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் போதிய இருக்கை வசதி இல்லாததால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் தரையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டன. ஆனால், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பிரச்னை மற்றும் தேவைகளுக்காக தினமும் கலெக்டர் அலுவலகம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் அமர போதிய இருக்கை வசதி இல்லை. இதனால் பலரும் அவதிப்படுகின்றனர். பலர் நுழைவாயில் பகுதியிலேயே அமர்ந்து கொள்கின்றனர். சிலர் மரத்தடியிலும், தரையிலும் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நுழைவாயில் பகுதியில் மரம் உள்ள இடங்களில் கல் இருக்கை அல்லது மரத்தால் ஆன இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : floor ,Collector ,
× RELATED மயானத்திற்கு பாதை வசதியில்லாததால்...