×

வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச.2: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், பொருளாளர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் தென்னவன், அமைப்பு செயலாளர் ரகுபதி, தமிழ்பேரரசு கட்சி பொதுச்செயலாளர் மோகனராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்ற கூடாது. வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளில் மீதான தாக்குதல்களை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

Tags : Demonstration ,withdrawal ,
× RELATED சிஐடியு ஆர்ப்பாட்டம்