×

இளைஞர்களுக்கு காவலர் தேர்வு வழிகாட்டி கையேடுகள் எஸ்பி. வழங்கினார்

ஊட்டி, டிச. 2: தமிழக காவல் துறை மற்றும் சிறை துறையில் 10 ஆயிரத்து 906 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கு ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துைற சார்பில் ஊட்டி, குன்னூர், கூடலூர் உட்பட மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே காவலர் எழுத்து தேர்வு வரும் 13ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இறுதி கட்ட பயிற்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்சிக்கான புத்தகங்களை மாவட்ட எஸ்பி. சசிமோகன் வழங்கி ேபசுகையில், காவலர் தேர்வுக்கு பயிற்சி பெறும் இளைஞர்கள், நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மற்ற இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றார். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்