×

அறுவடைக்கு தயார் ஆகும் ஏலக்காய்

வால்பாறை, டிச.2: வால்பாறை பகுதியில் தோட்டப்பயிர்களான டீ, காபி, ஏலக்காய் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மே மாதம் மற்றும் ஜூன் மாதங்களில் பரவலாக பூ பிடித்து காய்கத்துவங்கும் ஏலச்செடி, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அறுவடைக்கு தயார் ஆகும். இந்நிலையில் தற்போது ஏலக்காய் நன்றாக காய் பிடித்து உள்ளது. விரைவில் அறுவடைக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேர்கடலைபோல செடியின் அடிப்பகுதியில் காயத்துவங்கும் ஏலக்காய் நறுமணம் வீசும். ஏலக்காய் சந்தையில் தரமான ஏலக்காய் கிலோ ரூ.600 முதல் ரூ.1600 வரை தரத்திற்கேற்ப விற்கப்படுகிறது.

Tags :
× RELATED ஒரேநாளில் 26 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்றது