×

கொரோனா எதிரோலி கீத குழுக்கள் வீடுகள் சந்திப்பு இல்லை

வால்பாறை, டிச.2:   டிசம்பர் மாதம் துவங்கிய நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வால்பாறை பகுதியில் உள்ள கீத குழுவினர்கள் வீடுகளுக்கு சென்று பாடல்கள் பாடி, இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் கூறுவது வாடிக்கை. டிசம்பர் 1ம் தேதியில் இருந்து 15 நாட்கள் நடைபெறும் கீத குழுக்கள் இவ்வருடம் கொரோனா தொற்றால் கைவிடப்பட்டு உள்ளது. இது குறித்து சி.எஸ்.ஐ. திருச்சபை ஆனைமலை மறைமாவட்ட தலைவர் ஜெயராஜ் கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக, திருச்சி தஞ்சை பேராயர்  உத்தரவின்படி, வால்பாறை பகுதியில் கிறிஸ்துமஸ் கீத பவனி வீடுகளுக்கு செல்வதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags : groups ,Corona Echo Anthem ,homes ,
× RELATED இல்லங்களில் நடைபெறும் இனிய வேல் பூசை