×

மலைச்சரிவுகளில் பூத்துக்குலுங்கும் டிசம்பர் பூக்கள்

வால்பாறை, டிச.2: வால்பாறை மலைப்பகுதிகளில் வெள்ளை நிற டிசம்பர் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிகளில் கண்டு ரசித்து வருகின்றனர். வால்பாறை மலைப்பகுதிகளில் மலைச்சரிவு மற்றும் பல்வேறு இடங்களில் தற்போது டிசம்பர் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. காண்போர் மனதை கொள்ளை கொள்ள செய்கிறது. நறுமணம் வீசும் இப்பூக்களால் பட்டாம்பூச்சிகள், பறவைகள் முற்றுகையிட்டு வருகிறது. மாலை நேரங்களில் வண்டுகள், பறவைகள் என ஆர்பரிப்பு சத்தம் மலைசரிவுகளில் ஒலிக்கிறது. பொதுவாக பனிக்கால துவக்கத்தில் பூக்கும் இப்பூக்கள், பூத்து மலைகளின் அழகை மெருகூட்டுகிறது. டிசம்பர் மாதம் பூக்கள் துவங்குவதால் டிசம்பர் பூக்கள் என்றழைக்கப்படுகிறது.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு