×

உலக எய்ட்ஸ் தின உறுதிமொழியேற்பு

ஈரோடு, டிச. 2:தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் உலக எய்ட்ஸ் தின உறுதி மொழியேற்பு நடைபெற்றது. பின்னர் விழிப்புணா–்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு