×

தடையின்றி ஆவின் பால் விநியோகம் சேர்மன் சின்னத்துரை தகவல்

தூத்துக்குடி, டிச. 2: ஆவின் சேர்மன் சின்னத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதும் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் ஆணையாளர் வள்ளலார் ஆலோசனையின் பேரிலும் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் 5 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு பால் விநியோகத்தில் ஏதேனும் இடையூறுகள் இருந்தால்அவற்றை சரிசெய்ய சிறப்புதொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம். அதன்படி, கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 9585229933, 9488994407 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

 எட்டயபுரம், விளாத்திக்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 6385469077, 9003554149  என்ற எண்களிலும், வைகுண்டம், ஏரல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 9789584921, 9655372541 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம். திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 9487123266, 8248503013  என்ற எண்களிலும், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 9750323718, 9940357439 என்ற எண்களிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆவின் அலுவலகத்தை  0461-2332244 என்ற தொலைபேசி எண்ணிலும், 7639054825, 8248230899 என்ற செல்போன் எண்களிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...