×

சண்முகநாதன், கேஆர்எம் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் உடன்குடியில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

உடன்குடி, டிச. 2: உடன்குடியில் மாற்றுக்கட்சியினர், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ, ஜெ. பேரவை மாவட்டச் செயலாளர் கேஆர்எம் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். உடன்குடி ஒன்றிய திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் சக்திவேல் மற்றும் சண்முகசுந்தரம், குலசை அழகப்பன், கம்சா, குமாரவேல் என்ற சுதா, தனுஷ்கோடி, உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா உடன்குடியில் நடந்தது.

 அதிமுக ஒன்றியச் செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். எம்ஜிஆர் மன்ற மாவட்டத் தலைவர் குணசேகரன், ஒன்றியச்  செயலாளர் பொன்ராம், ஒன்றிய பொருளாளர் குலசை சங்கரலிங்கம், ரங்கன் முன்னிலை வகித்தனர். இதையடுத்து மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ, ஜெ. பேரவை மாவட்டச் செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதில் விவசாய அணி ராஜதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆயிஷா கல்லாசி, யூனியன் கவுன்சிலர் ஜெயகமலா, அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் வேல்பாண்டி, தாவீது, இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாளர் சொர்ணசேகர், விவசாய அணி வெள்ளத்துரை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : parties ,Shanmuganathan ,constituency ,AIADMK ,
× RELATED எடப்பாடி பிரதமராக வாய்ப்பிருக்கு…: ஜோசியம் சொல்லும் பிரேமலதா