×

பூட்டி கிடக்கும் பெட்ரோல் நிலையம் திறக்க கோரி கான்பெட் ஊழியர்கள் தொடர் போராட்டம்

காரைக்கால், டிச.2: கான்பெட் பெட்ரோல் நிலையம் திறக்க கோரி, காரைக்காலில் நேற்று 16ம் நாளாக கான்பெட் ஊழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர்.
காரைக்காலில் மூடி கிடைக்கும் 3 கான்பெட் பெட்ரோல் நிலையங்களை திறக்க வேண்டும். நிலுவையில் உள்ள ஒரு வருட கால ஊதியத்தை வழங்க வேண்டும். கான்பெட் பெட்ரோல் நிலையத்தில் ஊழல் செய்தோர் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை சி.பி.ஐ கைது செய்து, அவர்கள் சுரண்டிய நிதியை பறிமுதல் செய்ய வேண்டும். கான்பெட்டை மீண்டும் இயக்க ரூ.5 கோடியை அரசு ஒதுக்கவேண்டும். அல்லது, கான்பெட் இடத்தை வங்கியில் வைத்து, ரூ.5 கோடியை கடனாக பெறவேண்டும்.

இரண்டு வருடங்களாக ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த இ.பி.எப் மற்றும் தொகையை கட்ட வேண்டும். கான்பெட் நிறுவனத்தை கான்பெட் பெயரிலேயே இயக்க வேண்டும், ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த வங்கி கடன் மற்றும் எல்.ஐ.சி தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் கட்ட வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் கான்பெட் ஊழியர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காரைக்கால், அம்மாள்சத்திரம் கான்பெட் பெட்ரோல் பங்கில், ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்வமணி தலைமையில் கடந்த 15 நாளாக பிச்சையெடுப்பு போராட்டும், கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போராட்டம், மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று 16 வது நாளாக கான்பெட் பெட்ரோல் பங்க் வாசலில் ஊழியர்கள், தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்திற்கு காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.இப்போராட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு துணை தலைவர்கள் பாஸ்கரன், முஹம்மது யூசுப், பெரியநாயகம், விஜயகுமார், செயலாளர் முருகேசன், பொருளாளர் சதானந்தம், துணை செயலாளர்கள் ஆனந்த், ஷண்முகம், பாப் வில்லியம், பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : opening ,petrol station ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு