×

ஐடிஐ.யில் தொழிற்பயிற்சி முடித்தவர்கள் என்ஏசி சான்றிதழ் பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு

நாகை, டிச.2: நாகையில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளாகள் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் பிரவின்பிநாயர் தெரிவித்துள்ளார்.தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (என்ஏசி) பெறுவதற்கு ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள் மத்திய, மாநில அரசு பொதுத்துறை மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு நேரழயாக விண்ணப்பித்து, பயிற்சி பெற வசதியாக மத்திய அரசின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் https://apprenticeshipindia.org என்ற புதிய இணையதளம்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தொழிற் பழகுநர் பயிற்சி பெற விரும்புவோர், தங்களது அசல் கல்விச் சான்றிதழ், ஆதார் எண், பான் கார்ட் மற்றும் வங்கி கணக்கு போன்ற விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து தாங்கள் விரும்பும் நிறுவனத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்த பின்னர் பயிற்சி பெற விரும்பும் நிறுவனத்தை தேர்வு செய்து, குறிப்பிட்ட பிரிவில் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் தங்களின் விண்ணப்பத்தை ஏற்று ஒப்பந்தம் வழங்கும் நேரத்தில் அந்த ஒப்பந்தத்தை ஏற்று பயிற்சி மேற்கொள்ளலாம். இப்பயிற்சிக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை உதவித்தொகை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. தொழிற் பழகுநர் சான்றிதழ் பெறுபவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு சலுகையும் கிடைக்கும்.கூடுதல் தகவல் அறிய 04365-250126 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது நாகை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்) உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Trainees ,ITI ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...