×

(தி.மலை) ஒரு மாத குழந்தை பலி

செய்யாறு, டிச.2: செய்யாறு அடுத்த தூசி கிராமத்தை சேர்ந்தவர் ஷேக்நூர்பாஷா(28), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஷபீனா. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. கடந்த 28 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை குழந்தை திடீரென அழுதபடி இருந்தது. இதனால் குழந்தையை குடும்பத்தினர் காஞ்சிபுரம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது.

இதுகுறித்து ஷேக்பாஷா தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ ராஜ் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து, குழந்தை இறந்ததற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : T.Malai ,baby ,
× RELATED (தி.மலை) பழங்குடி பெண்களுக்கு தையல் பயிற்சி