×

தண்டராம்பட்டு அருகே 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

தண்டராம்பட்டு, டிச.2: தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை வனச்சரகர் பாலு, வனவர்கள் தர், முருகன் உள்ளிட்ட வனத்துறையினர் பெண்ணையாறு, வேப்பூர் செக்கடி மேற்கு பீட் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அப்போது புதர் மறைவில் 3 பேரல்களில் சாராய ஊறல் வைக்கப்பட்டிருந்தது. அவை சாராயம் காய்ச்சுவதற்காக மர்ம ஆசாமிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புதர் மறைவில் இருந்த 600 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். மேலும், ஊறல் பதுக்கி வைத்திருந்த நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : Thandarambattu ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்து மது விற்பதா? கமல் கண்டனம்