×

(தி.மலை) மழையால் பாதித்த பகுதிகளை திமுக தொகுதி பொறுப்பாளர் ஆய்வு கலசபாக்கம் ஒன்றியத்தில்

கலசபாக்கம், டிச.2: கலசபாக்கம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலசப்பாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர் ஆய்வு செய்தார்கலசபாக்கம் ஒன்றியத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் கடலாடி, மட்டவெட்டு, கீழ்பாலூர், மேல்பாலூர், வீரலூர், மேல்சோழங்குப்பம், காந்தபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர் வகைகள் மழையால் சேதமடைந்தது.இந்நிலையில், கலசபாக்கம் ஒன்றியம் வீரலூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த நெல் மற்றும் வாழை தோட்டங்களை கலசபாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

இதில் ஒன்றிய திமுக செயலாளர்கள் அ.சிவக்குமார், வக்கீல் க.சுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். கலசபாக்கம் ஒன்றியம் வீரலூர் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வாழைத் தோட்டத்தை கலசபாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

Tags : T.Malai ,DMK ,areas ,
× RELATED (தி.மலை) பழங்குடி பெண்களுக்கு தையல் பயிற்சி