×

வெளிமாவட்ட பாமகவினரை போலீசார் தடுத்ததால் சாலை மறியல் வேலூர், பள்ளிகொண்டாவில் போக்குவரத்து பாதிப்பு சென்னை போராட்டத்துக்கு செல்ல முயன்ற

வேலூர், டிச.2: வன்னியர்களுக்கு வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள பாமகவினர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை வழியாக சென்னைக்கு வரும் பாமகவினரை அந்தந்த மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்த வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி நேற்று அதிகாலை 3 மணி முதல் மாவட்ட எல்லைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர்-வேலூர் மாவட்ட எல்லையான பள்ளிக்கொண்டா டோல்கட் பகுதியில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட மினி வேன்களில் பாமகவினர் வந்தனர். அவர்களை டோல்கேட் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி வாகனங்களில் புறப்பட்டனர்.

அவர்களை வேலூர்-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பம் பகுதியில் அதிகாலை 4 மணியளவில் சத்துவாச்சாரி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் 200க்கும் மேற்பட்ட பாமகவினர் தேசிய நெடுஞ்சாலையில் மறியிலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போலீசாரின் தடையை மீறி சென்னையை நோக்கி வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதற்கிடையே நேற்று காலை முதல் வேலூர் மாவட்டத்தில் இருந்து பாமகவினர் சென்னைக்கு செல்வதை தடுக்க ஏடிஎஸ்பி மதிவாணன், ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான், காட்பாடி டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் வேலூர் மாவட்ட எல்லையான பள்ளிக்கொண்டா மற்றும் பிள்ளையார்குப்பத்தில் குவிக்கப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற கார்கள், வேன்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. சென்னைக்கு செல்ல முயன்ற குடியாத்தம், காட்பாடி, வேலூர், அணைக்கட்டு ஆகிய இடங்களில் மொத்தம் 365 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை உயர்அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னையில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள பாமகவினர் நேற்று காலை செல்ல முயன்றனர். அவர்களை அந்தந்த பகுதிகளிலேயே போலீசார் தடுத்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து, பள்ளிக்கொண்டா மற்றும் பிள்ளையார்குப்பத்தில் ஆயதப்படை போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்தனர். மாவட்ட முழுவதும் மொத்தம் 365 பேர் கைது செய்யப்பட்டனர். கார்கள் மற்றும் மற்ற வாகனங்களில் போராட்டத்துக்கு சென்றவர்களை திரும்பி அனுப்பி வைத்தனர். மீறி சென்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.’ என்றனர். கேப்சன்..வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பத்தில் ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான் தலைமையில் குவிக்கப்பட்ட போலீசார்.

Tags : Vellore ,Pallikonda ,districts ,
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...