×

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சிதம்பரம், டிச. 2:  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பல்வேறு நிதி சிக்கலில் சிக்கியிருப்பதாக கூறி பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் கடந்த 2012ம் ஆண்டு போராட்டம் நடத்தினர்.  இதையடுத்து தமிழக அரசு ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது. 2013ம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ்மீனா நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டு தனிச்சட்டம் இயற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசே
ஏற்றது.அப்போது மாணவர் சேர்க்கை, பணி நியமனம், இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் நடந்த பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவுகள் என்ன ஆனது? என இன்று இதுவரை தெரியவில்லை.

  அவ்வப்போது லஞ்சஒழிப்பு போலீசாருக்கு எழும் சந்தேங்களை பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று சென்னை லஞ்ச ஒழிப்பு துறையை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் குழுவினர், 10வது முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். பின்னர்  பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரிடம் விசாரணை நடத்தினர்.  நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விசாரணை துவங்கியிருப்பது ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : police investigation ,Chidambaram Annamalai University ,
× RELATED தனது கள்ளக்காதலியிடம் பழகியதால்...