×

குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் திடீர் முற்றுகை பிடிஓவுடன் வாக்குவாதம்-பரபரப்பு

உளுந்தூர்பேட்டை, டிச. 2: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது. ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தில் ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த 50 பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ேநற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வத்தை கிராம மக்கள் காலிகுடத்துடன் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மின் மோட்டார் வைத்து தண்ணீர் பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிடிஓ கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Village panchayat office ,
× RELATED இடியும் நிலையில் மேல்நிலை குடிநீர்...