×

வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு அணைகளில் கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்

நாகர்கோவில், டிச.2:  குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் புயல் சின்னம் காரணமாக அடுத்துவரும் நாட்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையங்கள் கூறி வருகின்றன. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நிரம்பிய நிலையில் காணப்பட்ட அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. அணைகளுக்கு நீர்வரத்து அதிகம் காணப்படும் என்று எதிர்பார்க்கின்ற நிலையில் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை,பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய 3 அணைகளில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.98 அடியாகும். அணைக்கு 472 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 526 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.90 அடியாகும். அணைக்கு 176 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 350 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 14.04 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 151 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொய்கையில் 19.90 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறில் 35.76 அடியாக நீர்மட்டம் காணப்படுகிறது. அணையில் இருந்த 20 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. முக்கடல் அணை நீர்மட்டம் 21.5 அடியாகும். அணையில் இருந்து 7.42 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு