×

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி’ கல்லிடைக்குறிச்சியில் நெசவாளர்களுடன் திண்டுக்கல் லியோனி கலந்துரையாடல்

அம்பை டிச.1:  கல்லிடைக்குறிச்சியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு கைத்தறி நெசவாளர்கள், ஆட்டோ டிரைவர்களுடன் கலந்துரையாடினார். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சியில் திமுகவின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. இதில் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஏராளமான கைத்தறி நெசவாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், திண்டுக்கல் லியோனியுடன் கலந்துரையாடல் நடத்தி தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் அப்பாவு வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் இசக்கி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு நெசவாளர்கள், ஆட்டோ டிரைவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

  நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஆரோக்கிய எட்வின், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர்
செல்வ சூடாமணி, கணேஷ் குமார் ஆதித்தன், ஷேக் முஜிபுர், அண்ணாதுரை, வேல்முருகன், அனிபா, சங்கர், அன்வர், சிவா, ஜார்ஜ் ராபர்ட், சரீப், சக்திவேல், ஆனந்த், அப்துல் ஹக், கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், தங்கப்பன்,ஆமினாள், அலிபாத்து, மகளிரணி அமைப்பாளர் ஜூரி எட்வர்டு, கணபதியம்மாள், ரத்தினம்மாள் மற்றும் நுற்றுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிவந்திபுரம், வி.கே.புரத்தில் நடந்த நிகழ்ச்சியில்  திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டார்.

Tags : Weavers ,
× RELATED ₹72 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை பணி