×

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நாசரேத்தில் நலத்திட்ட உதவிகள் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார்

நாசரேத், டிச. 1: திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நாசரேத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார்.
 விழாவுக்கு வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. ஏ.டி.கே.ஜெயசீலன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ,  200 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கினர்.  இதில் மாணவர் அணி மாநில துணை அமைப்பாளர் உமரிசங்கர்,  இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றியச் செயலாளர் இசக்கிபாண்டி, வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் இளங்கோ, வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர்  கிருபாகரன், நகரச் செயலாளர் ரவி செல்வகுமார், தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுடலைமுத்து, மாவட்டப் பிரதிநிதிகள் அலெக்ஸ் புருட்டோ, அன்பு, சாமுவேல்,  முருகதுரை, தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் பேரின்பராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜோதி டேவிட், கச்சனாவிளை செயலாளர் ராமானுஜம், ஆழ்வை ஒன்றிய அவைத்தலைவர் சவுந்தர், நாசரேத் நகர அவைத்தலைவர் அருள்ராஜ், வார்டு செயலாளர் கருத்தையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Anita Radhakrishnan MLA ,occasion ,Nazareth ,birthday ,Stalin ,Udayanithi ,
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்