×

ராயனூர் சாலையில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க கோரிக்கை

கரூர், டிச. 1: கரூர் பகுதியில் இருந்து திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருமாநிலையூர் ராயனூர் வழியாக செல்கின்றன. இந்த சாலையில் திருமாநிலையூர் பகுதியில் இருந்து ராயனூர் வரை குறிப்பிட்ட தூரம் தெரு விளக்கு வசதியின்மை காரணமாக கும்மிருட்டாகவே காணப்படுகிறது. மேலும், இந்த பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்ல அச்சமடைந்து வருகின்றனர். எனவே மக்களின் நலன் கருதி இந்த சாலையில் கூடுதல் தெரு விளக்கு வசதி ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Rayanoor Road ,
× RELATED ரூ.5 கோடியில் சோலார் தெருவிளக்குகள்