×

கரூர் காந்தி கிராமத்தில் அவல நிலை குடிகாரர்களின் புகலிடமாக மாறி வரும் விளையாட்டு திடல் மேடை

கரூர், டிச. 1: கரூர் காந்திகிராமத்தில் விளையாட்டு திடல் அருகேயுள்ள மேடை வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் என பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் காந்திகிராமம் பகுதியில் விளையாட்டு திடல் உள்ளது. இதன் அருகில் மேடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மேடை போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் பல்வேறு அச்சுறுத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது டாஸ்மாக் கடைகளின் அருகே பார்கள் செயல்பாடு இன்மையால், இரவு நேரங்களில் இந்த வளாகம் பாராகவும் மாறி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த மேடை வளாகத்தை தூய்மைப்படுத்தி, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வளாகத்துக்கு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karur Gandhi Village ,
× RELATED சாலை, பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை