×

புனேவில் இருந்து 30 வாக்கு பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலகம் வந்தது

கரூர், டிச. 1: சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக புனேவில் இருந்து 30 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று கருர் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு ஏப்ரல் மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து பிற மாவட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், புனேவில் இருந்து 30 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று காலை கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. அதனை, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, வாக்குப்பதிவு இயந்திர அறையில் பாதுகாப்பாக வைத்தனர்.

Tags : Pune ,Collector ,
× RELATED புனேவில் உள்ள ஆலையில் ஏற்பட்ட தீ...