×

மீனவர்களுக்கான வாழ்வாதார திட்டங்கள் குறித்த கருத்தரங்கம்

நாகை, டிச.1: நாகையில், சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சி ஆகியவை சார்பில் மீனவர்களுக்கான வாழ்வாதார திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் நாகையில் நடந்தது. சிவசேனா கட்சி மாநில செயலாளர் சுந்தரவடிவேலன் தலைமை வகித்தார். இந்து மக்கள் கட்சி நகர தலைவர் பிரதீப் வரவேற்றார். இந்து மக்கள் கட்சி மாவட்ட பொது செயலாளர் தாசன், இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சிவசேனா கட்சி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி செந்தில், மாவட்ட மகளிரணி தலைவி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசு வழங்கும் சலுகைகள், நலத்திட்டங்கள், வாழ்வாதார திட்டங்கள் குறித்தும், மீனவர்கள் மீன் பிடிக்கும் போதும் மீன்கள் நுகர்வோரை சென்றடையும் வரை செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்தும், மத்திய அரசு மீனவர்கள் நலன் காக்க ஒதுக்கியுள்ள ரு.20 ஆயிரம் கோடி நலத் திட்டங்கள் குறித்தும் மீன்வளத்துறை ஆய்வாளராக இருந்து பணி ஓய்வு பெற்ற சவுந்தர்ராஜன் மீனவர்களுக்கு கருத்துரை வழங்கி னார். சிவசேனா கட்சி மீனவர் அணி மாவட்ட தலைவர் சகாயராஜ் நன்றி கூறினார்.

Tags : Seminar ,Fishermen ,
× RELATED கருத்தரங்கம்