×

ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ரூ.1,625 கோடி பணப்பலன் உடனே வழங்க வேண்டும் ஸ்டாப்கரப்ஷன் தொழிற்சங்க பேரவை கோரிக்கை

நாகை, டிச.1: ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1,625 கோடியை உடனே வழங்க கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை சார்பில் தலைவர் ராமசீனிவாசன், பொதுச்செயலாளர் காமராஜ் ஆகியோர் சென்னை அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.அந்த மனுவில் அவர்கள் கூட்டாக தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணி ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் பணிகாலத்தில் இறந்த தொழிலாளர்களுக்கு 2020 ஏப்ரல் வரையிலும் போக்குவரத்துக்கழகத்தால் வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு பணம், ஓய்வூதிய ஒப்படைப்பு பணம் போன்ற வகையில் ரூ.1,625 கோடி கடந்த 20 மாதங்கள் ஆகியும் வழங்கப்படவில்லை. இதனால் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தில் திருமணம், குழந்தைகளின் கல்வி செலவு, மருத்துவச்செலவு உள்ளிட்ட செலவுகளை செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். அதேபோல் 2016ம் ஆண்டு முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு பஞ்சப்படியும் வழங்கபடாமல் நிலுவையில் உள்ளது. இது போன்ற நிலுவை தொகைகளை வழங்கமால் இருப்பதால் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்றுள்ளனர். எனவே அரசு தலையிட்டு உடனே நிலுவையில் உள்ள தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : StopCorpion Trade Union Congress ,transport workers ,
× RELATED குத்தகை பாக்கி செலுத்தாததால் வருவாய்துறை நிலம் மீட்பு