×

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் சாலைமறியல்

நாகை, டிச.1: புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரு ம்ப பெற வலியுறுத்தி டில் லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நாகை மாலி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பகு, நகரச் செயலாளர் சீனிவாசன் உட்பட 20 பேர் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஒன்று கூடினர். புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி டில்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்மையாக கண்டிப்பது. டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு முழுமையாக ஆதரவு அளிப்பது என்று கோஷங்கள் எழுப்பினர்.
அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் 20 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


Tags : commune ,Nagaland ,
× RELATED டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்ணா