×

20 பேர் கைது ஆன்லைன் ரம்மி விளையாடினால் சட்டப்படி நடவடிக்கை

மயிலாடுதுறை, டிச.1: மயிலாடுதுறை எஸ்.பி.நாதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுக்களை அரசு தடைசெய்துள்ளது. இனிவரும் காலங்களில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுபவரும், இவ்விளையாட்டை நடத்துவோரும் சட்டப்படி உரிய அபராதம், சிறைத்தண்டனைக்கும் ஆளாக்கப்படுவதோடு. இவ்விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் கணினிகளும் மற்ற கருவிகளும் பறிமுதல் செய்யப்படும். இணையவழி பணப்பறிமாற்றங்கள், தடுக்கப்படும். இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் ஆன்லைன் விளையாட்டு, இணையவழி விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ