×

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 201 கோரிக்கை மனுக்கள் குவிந்தன


பெரம்பலூர், டிச. 1: பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 201 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவின்படி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்  வெங்கட பிரியா அறிவுரையின்படி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று நடந்தது. இதன்படி பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் 51 மனுக்கள், வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் 16 மனுக்கள், ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் 8 மனுக்கள், குன்னம் தாலுகா அலுவலகத்தில் 14 மனுக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாளுக்காக வைக்கப் பட்டுள்ள தனிப்பெட்டியில் 112 மனுக்கள் பெறப்பட்டது. மொத்தத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில 4 தாலுகா அலுவலகங்களிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு 201 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் முறையாக பதிவு செய்யப்படடு அதற்கான ஒப்புதல் ரசீது மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Perambalur ,grievance meeting ,district ,
× RELATED மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை கலெக்டர் தலைமையில் நடத்த கோரிக்கை