×

கார்த்திகை சோம வாரத்தையொட்டி சொக்கநாதர் கோயிலில் சங்காபிஷேக விழா

பெரம்பலூர், டிச. 1: பெரம்பலூர் துறைமங்கலம் சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோம வாரத்தையொட்டி சங்காபிஷேக விழா நடந்தது. பெரம்பலூர் துறைமங்கலத்தில் சொக்கநாதர் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கார்த்தி கை மாதம் சோமவார பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டு கார்த்திகை மாத திங்கட்கிழமையான நேற்று சொக்கநாதர் கோயிலில் சிவபெருமானுக்கு சோமவார பூஜை நடந்தது. இதில் 108 சங்குகளை சிவலிங்க வடிவில் வைத்து வேள்வியாக பூஜை செய்யப்பட்டது. சிவலிங்கத்துக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags : occasion ,Sokkanathar Temple ,
× RELATED பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும்...