×

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், டிச. 1: பெரம்பலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 15ம் தேதி வரை பொதுமக்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் வருகிற 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் பெயர் சேர்த்தலுக்கு படிவம் -6, நீக்கம் திருத்தத்துக்கு படிவம் 7, ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8, இடமாற்றம் திருத்தத்துக்கு படிவம் 8ஏ, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திருத்தத்துக்கு படிவம் 6 ஏ-வையும் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வருகிற 12ம் தேதி மற்றும் 13ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெறலாம். இந்த படிவங்களில் பெறப்பட்ட விவரங்கள் https://perambalur.nic.in/ என்ற பெரம்பலூர் மாவட்ட அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் சப். கலெக்டர் அலுவலக அறிவிப்பு பலகையில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தத்தில் பெறப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED புதிய வரைவு வாக்காளர் பட்டியலில்...