×

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் கண்டித்து திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்

ஆத்தூர், டிச.1:ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், நேற்று ஒன்றியக்குழு தலைவர் லிங்கம்மாள் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும் தீர்மானங்களை அலுவலர் வசித்தார். அப்போது, திமுக உறுப்பினர்கள் பத்மினி பிரியதர்ஷினி, சேகர் உள்ளிட்டவர்கள் இருக்கையை விட்டு எழுந்து, “கடந்த ஓராண்டாக தங்களது வார்டுகளில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தரக்கோரி, பலமுறை கேட்டும் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. மக்களின் பணிகளும் எதுவும் நடக்கவில்லை. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம் “ எனக்கூறி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு தர்ணாவில் குதித்தனர்.
அதேநேரத்தில் தலைவர் லிங்கம்மாள் மற்றும் அதிமுக, தேமுதிக உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தினை நடத்தி முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை. அதிகாரிகள் சமரசப்படுத்தினர். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : DMK ,
× RELATED நாளை திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் எஸ்.ஆர்.சிவலிங்கம் அறிக்கை