×

காவிரிக்கரையில் கிணறு வெட்ட அரசு அனுமதி சிறுவிவசாயிகள் நீரேற்று சங்கம் வரவேற்பு

சேந்தமங்கலம், டிச.1:பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அடுத்துள்ள மொளசி அருகே காவிரி கரையோரத்தில் கிணறு வெட்டி, அதன் மூலம் குடிநீர் தேவைக்கும், விவசாய பாசனத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பரமத்திவேலூர் தாலுகா கோலாரம் கிராமம் வாவிபாளையத்தில் செயல்பட்டு வரும் ஓம்முருகா சிறு விவசாயிகள் நீரேற்று பாசன சங்கத்தின் தலைவரும், நாமக்கல் பிஎஸ்டி கட்டுமான நிறுவனங்கள் சேர்மன் தென்னரசு தலைமையில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முதல்வர் பழனிசாமிக்கும், திட்டம் நிறைவேற உறுதுணையாக இருந்த மின்துறை அமைச்சர் தங்கமணியை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். நீரேற்று பாசன சங்க தலைவர் தென்னரசு கூறுகையில், ‘தமிழக அரசு விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் கோலாரம் உள்பட 5 கிராமங்களில் உள்ள 325 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெற்று, 1500 விவசாயிகள் பயன் பெறுவார்கள்,’ என்றார்

Tags :
× RELATED பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு