×

பள்ளிபாளையத்தில் மின்சாரம் தாக்கியதில் மாணவிக்கு கை அகற்றம் மருத்துவ செலவுக்கு உதவ கோரிக்கை

பள்ளிபாளையம், டிச.1:பள்ளிபாளையம் டிவிஎஸ் மேட்டை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி தியாகராஜன். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஹேமா(21), ஜெகதீஷ்(19) என்ற மகன், மகள் உள்ளனர். ஹேமா திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியில் கல்லூரியில் இறுதியாண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி தீபாவளியன்று ஹேமா, ஆண்டிகாட்டில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்றார். அங்கு, பால்கனியில் நின்று போன் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்கம்பி அறுந்து பால்கனியில் விழுந்து, ஹேமா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 கைகளிலும், வயிற்றிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அலறி துடித்த மாணவியை பள்ளிபாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மின்சாரம் பாய்ந்ததில் ஹேமாவின் இடதுகையில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்புகள் சேதமானது. இதையடுத்து, அவரது இடது கை நேற்று முன்தினம் ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டது. இதுவரை ₹8 லட்சம் வரை மருத்துவ செலவாகியுள்ளதால் பெற்றோர் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மின்கம்பி அறுந்து விழுந்து விபத்தினை ஏற்படுத்தியதால், பாதிக்கப்பட்ட மாணவியின் மருத்துவ செலவினை அரசு ஏற்று, அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு வேலை வழங்க வேண்டுமென அவரது தந்தை தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : removal ,student ,school ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...