×

சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் தரப்பட்ட மனுக்கள் விவரங்களை தெரிவிக்க வேண்டும் கலெக்டரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு

கிருஷ்ணகிரி, டிச.1: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ., மாவட்ட துணை செயலாளர் வேப்பனஹள்ளி முருகன் எம்எல்ஏ., தலைமையில் திமுக நிர்வாகிகள், நேற்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சிறப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற்று வருகிறது. அதற்கான சிறப்பு முகாமில், புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரை அவ்வாறு பெறப்பட்டுள்ள நேரடி மனுக்கள் மற்றும் இணைய தள வழியாக பெறப்பட்டுள்ள மனுக்கள் குறித்த முழு விவரங்களையும் வாக்காளர் பெயர், வயது, தந்தை/கணவர் பெயர், வீட்டு முகவரி, சட்டமன்ற தொகுதியின் பெயர், பாகம் எண், அரசியல் கட்சி முகவர் மூலமாக மனு கொடுக்கப்பட்டிருந்தால் அவரின் விவரம், அரசியல் கட்சியின் பாகநிலை முகவர்கள் கொடுத்த மனுக்கள் விவரத்தை தெரிவிக்க வேண்டும்.  பாகநிலை அலுவலர்களால் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள படிவம் 9, 10, 11 மற்றும் 11யு ஆகிய படிவங்களை சி.டி மூலமாக வேப்பனஹள்ளி, ஓசூர், தளி சட்டமன்ற தொகுதி வாரியாக எங்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ஒன்றிய செயலாளர்கள் ரகுநாத், நாகேஷ் மற்றும் நிர்வாகிகள் கருணாகரன், சதாசிவம், சிவன், முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : DMK ,Collector ,
× RELATED போலீஸ் துணையோடு அதிமுக பேனர்கள்...