×

கெலமங்கலம் அருகே திருமண கோஷ்டி சென்ற பஸ் லாரி மீது மோதல்:15 பேர் காயம்

தேன்கனிக்கோட்டை, டிச.1: கெலமங்கலம் அருகே தனியார் பஸ், லாரி மீது மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 15 பேர் காயமடைந்தனர். கெலமங்கலம் பகுதியை சேர்ந்த திருமண கோஷ்டியினர் 35 பேருடன், திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று மாலை கெலமங்கலம் நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ் அக்கொண்டப்பள்ளி-மஞ்சலகிரி அருகே சென்றபோது ஓசூரிலிருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி ஒன்று அங்குள்ள தனியார் தொழிற்சாலைக்குள் செல்ல இடது பக்கம் திரும்பியுள்ளது. அப்போது, பின்னால் வந்த தனியார் பஸ் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் வாசிம்(25), கிளினர் அஜித்(28) உட்பட திருமண கோஷ்டியினர் 15 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கெலமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kelamangalam ,
× RELATED பஞ்சாபில் கார் - பேருந்து நேருக்கு...