×

கிருஷ்ணகிரி நகரில் நாளை 4 இடங்களில் காணொலியில் திமுக சிறப்பு பொதுக்கூட்டம்நகர செயலாளர் அறிக்கை

கிருஷ்ணகிரி, டிச.1:கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளர் நவாப் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி நகர திமுக சார்பில் நாளை (2ம்தேதி) மாலை 3 மணியளவில், 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம், காணொலி மூலம் நடக்கிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். நகரத்தில் 1வது வார்டு முதல் 10ம் வார்டு வரை கிருஷ்ணகிரி பழையபேட்டை மார்க்கெட் அருகில் உள்ள ஏ.கே.கே. திருமண மண்டபத்தில் வட்ட செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும். இதேபோல், வெங்கடேஸ்வரா காம்ளக்ஸ் சுபம் மகாலிலும், பழைய சப்ஜெயில் ரோட்டில் உள்ள பாபு திருமண மண்டபம், சேலம் சாலையில் உள்ள மீனாட்சி மகாலிலும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் அனனவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : DMK ,meeting ,places ,Krishnagiri ,
× RELATED ஓசூரில் திமுக ஆலோசனை கூட்டம்