×

உண்டுஉறைவிட பள்ளியில் குழந்தைகள் சேர்க்கை

விருதுநகர், நவ.30: விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, ஆனைக்குளம், அ.முக்குளம் பகுதிகளில் உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி செல்லா இடைநின்ற பெண் குழந்தைகள் பயின்று வருகின்றனர். இங்கு குழந்தைகளுக்கு கல்வி, உடை, உணவு, இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. கல்வி தொடர்பான உபகரணங்கள், கராத்தே, சாரணர் பயிற்சி உடைகள் மற்றும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கேஜிபிபி பள்ளியில் பள்ளி செல்லா இடை நின்ற 10 முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளை சேர்க்க விரும்பினால், நரிக்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளரை 97888 59235 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 7 முதல் 14 வயதிற்குட்பட்ட இடை நின்ற குழந்தைகளை 2 முதல் 8ம் வகுப்பு வரை அருகில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளில் சேர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags : children ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைக்க கோரி மனு