×

மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது

ராஜபாளையம், நவ.30: ராஜபாளையம் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் மூன்று பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் கிராமத்தில் நடைபெற்ற எரீச்சீஸ்வர அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தில் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அழகம்மாள்(65) கலந்துகொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் அருகிலிருந்த இளம்பெண் ஒருவர் அழகம்மாள் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயினை திருடிக் கொண்டு ஓடினார். இதையறிந்த அழகம்மாள் சத்தம் போடவே அருகிலிருந்தவர்கள் விரட்டி சென்று இளம் பெண்ணை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் நகை திருடிய இளம்பெண் பெரம்பலூர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா மனைவி பிரியா(30) என தெரியவந்தது. கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பவுன் நகையை மீட்டு பிரியாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : jewelery ,
× RELATED வல்லம் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது