×

தலித் ஆயர்களை நியமிக்க வலியுறுத்தி பிரசாரம்

திருவில்லிபுத்தூர், நவ. 30: விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சமூக நீதிப்பேரவை, தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில், தலித் ஆயர்களை நியமிக்க வலியுறுத்தி, திருவில்லிபுத்தூரில் பிரசார இயக்கம் நடந்தது. திருவில்லிபுத்தூரில் உள்ள தூய இருதய ஆலயம் முன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கிறிஸ்தவ சமூக நீதிப்பேரவை, தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில், நேற்று பிரசார இயக்கம் நடந்தது. இப்பிரசாரத்துக்கு, கிறிஸ்தவ சமூக நீதிப்பேரவை மாநில துணைப்பொதுச்செயலாளர் கப்பல் பாபு தலைமை வகித்தார். மாவட்ட கிறிஸ்தவ சமூக நீதிப்பேரவை துணை அமைப்பாளர் அருள் ஆனந்த் மற்றும் தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் பொறுப்பாளர் அன்பரசன், விடுதலை சிறுத்தைகட்சியின் திருவில்லிபுத்தூர் நகர செயலர் மைக்கேல்ராஜ், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் ராஜூ, விருதுநகர் மாவட்ட முற்போக்கு மாணவர் அணியின் மாவட்ட அமைப்பாளர் எழில்வளவன், புதுப்பட்டி பாலசுப்பிரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரசாரத்தில், ‘தமிழ்நாடு கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் நியமனத்தில் தமிழக ஆயர் பேரவை நிர்ணயித்த விகிதாச்சார அடிப்படையில், தலித் ஆயர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.

Tags : Campaign ,bishops ,
× RELATED ஜெயலலிதா பேசிய இடத்தில் எடப்பாடி நாளை பிரசாரம்