×

காரியாபட்டி பகுதியில் ராபி பருவ பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு

காரியாபட்டி, நவ. 30: காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2020-21 ராபி பருவத்திற்கான பயிர் காப்பீட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செலுத்த டிச.15, மக்காசோளம், கம்பு, சோளம், துவரை, பருத்திக்கு டிச.21, உளுந்து மற்றும் பாசி பயிருக்கு நவ.30, நிலக்கடலை பயிருக்கு 2021 ஜன.20, எள் பயிருக்கு பிரிமியம் கட்ட 2021 ஜன.31 ஆகியவை கடைசி தேதிகளாகும். பயிர் வாரியாக ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.355, மக்காச்சோளத்திற்கு ரூ.262, துவரை, உளுந்து, பாசிப்பயறுக்கு ரூ.192, நிலக்கடலைக்கு ரூ.275, பருத்திக்கு ரூ.430, சோளத்திற்கு ரூ.112, கம்புக்கு ரூ.132, மற்றும் எள் பயிருக்கு ரூ 106 செலுத்த வேண்டும்.

இது கடன் பெறும் மற்றும் கடன் பெறாத சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும். விவசாயிகள், பிரீமியக் கட்டணத்தை தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்,
தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தலாம். மேலும், விரிவான விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களையும் மற்றும் காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையும் உழவன் செயலி மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags : Announcement ,area ,Kariyapatti ,
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...