×

சூதாடிய 10 பேர் கைது ரூ.1.47 லட்சம் பறிமுதல்

பொள்ளாச்சி, நவ.30:  பொள்ளாச்சியை அடுத்த சோழனூரில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் ேநற்று முன்தினம், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது. உடன் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று, அங்கு சூதாடி கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில், பல்வேறு பகுதியை சேர்ந்த கணபதி (44), காளீஸ்வரன் (30), முருகானந்தம் (45), ராஜசேகர் (40), பாலகிருஷ்ணன் (34), சதீஸ்குமார் (32), ரவிசந்திரன் (49) உள்பட 3 பேர் என மொத்தம் 10 பிடிபட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து, ரூ.1.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரையும் செய்தனர்.

Tags : gamblers ,
× RELATED சூதாடிய 10 பேர் கைது