×

தி.மு.க. ஆலோசனை கூட்டம்

அன்னூர், நவ.30:தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நிர்வாகிகளுடன் தினமும் ஒரு மாவட்டத்தில் `தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் பேசி வருகிறார். அதன்படி, நேற்று காலை 10 மணியளவில் காணொளி காட்சி மூலம் அன்னூர் பகுதியில் 5 மண்டபங்களில் தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அன்னூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய துணைத்தலைவர் சத்தியமூர்த்தி, நகர பொறுப்பாளர் ரஹமத்துல்லா, அன்னூர் ஒன்றிய துணை செயலாளர் மோகன சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், அன்னூரில் உள்ள கொங்கு செட்டியார் மஹால், சாமுத்திரிகா மஹால், செந்தூர் மஹால், கடத்தூர் பிரிவில் உள்ள கீர்த்தி மஹால் ஆகிய 5 இடங்களில் காணொலி காட்சி மூலம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார்.

Tags : meeting ,DMK Consultative ,
× RELATED கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்