×

கோவையில் நாட்டுக்கோழிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்

கோவை, நவ. 30: கோவை இக்கரை போளூவாம்பட்டி, தேவாரயபுரம், வெள்ளிமலைப்பட்டினம் ஆகிய ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாநில கோழியின அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இதில், 450 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சத்து 6 ஆயிரத்து 750 மதிப்பிலான நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது, தேவராயபுரம், வெள்ளிமலைப்பட்டினம், இக்கரை போளூவாம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களுக்கு 450 பேருக்கு நாட்டுக்கோழி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏழை பெண்கள் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்(பொ) ரூபன்சங்கர்ராஜா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள் சாமி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : Minister ,Coimbatore ,
× RELATED இலவச திட்ட பயனாளிகளை தேர்வு செய்ய...