×

மது, லாட்டரி விற்ற 10 பேர் கைது

ஈரோடு, நவ. 30: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையும், லாட்டரி விற்பனையும் ஜரூராக நடப்பதாக ஈரோடு எஸ்பி., தங்கதுரைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மது, லாட்டரி விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி., உத்தரவிட்டார். இதன்பேரில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 4பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மது அருந்த அனுமதித்ததாக கடை உரிமையாளர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 5பேரை கைது போலீசார் செய்தனர்.

Tags :
× RELATED லாட்டரி விற்ற 10 பேர் கைது