×

காவல்துறையினர் அதிரடி வேளாண் புதிய சட்டங்களை கண்டித்து தஞ்சையில் இன்று முதல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, டிச. 1: தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்நடந்தது.கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட்ட செயலாளர் நீலமேகம் கூறியதாவது: மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத சட்டங்கள் மற்றும் 2020 மின்சார ஆணையம் திருத்த சட்டம் இவற்றை உடனடியாக வாபஸ் பெறக்கோரி வட மாநில விவசாயிகள் டெல்லியில் முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டெல்லி காவல்துறையின் அடக்குமுறைகளையம் சமாளித்து விவசாயிகள் போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் முதல்கட்டமாக தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் இன்று முதல் தொடர் பெருந்திரள் முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியினர், பொதுமக்கள், வர்க்க வெகுஜன அரங்க அமைப்புகள், நிர்வாகிகள் பங்கேற்கஉள்ளனர் என்றார்.

Tags : town ,protest ,police action ,demonstration ,
× RELATED டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் மறியல் செய்ய முடிவு