×

லோடு ஆட்டோ, வேன், மாட்டு வண்டி பறிமுதல் வீரசிங்கம்பேட்டையில் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்காக போலீசாரின் விழிப்புணர்வு பேரணி

திருவையாறு, டிச. 1: திருவையாறு அடுத்த வீரசிங்கம்பேட்டை கிராமத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் அச்சம், பயம் இல்லாமல் வாழ்வதற்கும் காவல்துறை எந்நேரமும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும், ஆபத்து மற்றும் அவசர காலங்களில் உடனடியாக வந்து பாதுகாப்போம் உட்பட பல நோக்கத்தோடு போலீசாரின் அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். திருவையாறு டிஎஸ்பி சித்திரவேல், ஆயுதப்படை டிஎஸ்பி சம்பத் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணியில் போலீசார் பங்கேற்று பொதுமக்களுக்கு எந்தெந்த வகையில் உடனடியாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது, பொதுமக்கள் அச்சமில்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற செயல்முறை விளக்கம் அளித்தனர். இன்ஸ்பெக்டர்கள் விஜயலெட்சுமி, தேவி, வீரசிங்கம்பேட்டை ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சப்இன்ஸ்பெக்டர்கள் ஞானமுருகன், ஜோஸ்பின்சிசாரா மற்றும் போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : Lod ,awareness rally ,Weerasingampet ,
× RELATED ஆட்டோவை சரி செய்தபோது பைக் மோதி ஓட்டுநர் பலி